கொரோனா வைரஸ் குறித்து 'மாஸ்டர்' நடிகரின் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை திரையுலகை சேர்ந்த பலர் பதிவு செய்து வரும் நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த் சாந்தனு இதுகுறித்து ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வீடியோ கொரோனா வைரஸ் எவ்வளவு மோசமானது என்று பயமுறுத்தவோ அல்லது உங்களுக்கு பாடம் எடுக்கவோ அல்ல. இரண்டு முக்கிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையில் நாம் எல்லோருக்கும் சமூக வலைதளங்கள் மூலம் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்போம். கை கழுவுவது, மாஸ்க் அனிவது, கர்சீப் வைத்து கொண்டு தும்முவது இருமுவது ஆகியவை நாம் அறிந்ததே.

ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் உள்ளது. சாதாரணமாக ஒரு காய்ச்சல் வந்தவுடன் உடனே மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம். நம்மூரில் கொரோனா இருக்கின்றதா? என உடனே டெஸ்ட் செய்து ரிசல்ட் கொடுக்கும் வசதி இல்லை. எனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அந்த அறிகுறி இருந்தால் மட்டும் மருத்துவமனை செல்லவும். சாதாரண காய்ச்சலுக்கு உடனே கொரோனா டெஸ்ட்க்கு சென்று மருத்துவமனையில் கூட்டத்தை கூட்டினால் உண்மையாகவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே கொரோனா அறிகுறி என்ன என்பதை தெரிந்து கொண்டு, அறிகுறி இருந்தால் மட்டுமே அரசு மருத்துமனைக்கு செல்ல வேண்டும். அதுவரை யாரும் பயப்படவேண்டாம்.

இரண்டாவதாக உண்மையிலேயே நமக்கு கொரோனா இருந்தால் எப்படி நம்மை நாமே தனிப்பட்ட முறையில் தனிமைப்படுத்திக் கொள்வோமோ, அதேபோல் இப்பவே நம்மை நாம் தனிமைபப்டுத்தி கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

மேலும் நம்மால் முடிந்தவரை அருகில் உள்ளவர்களுக்கு ஏழை எளியவர்களுக்கு மாஸ்க் போன்ற பொருட்களை வாங்கி கொடுங்கள்’ என்று நடிகர் சாந்தனு கூறியுள்ளார்.

More News

நம் எதிரே இரு அறைகூவல்: கொரோனா குறித்து வைரமுத்து

உலகமெங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று வரை கொரோனா வைரஸுக்கு 258 பேர் பாதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

கொரோனா வைரஸ்: கமல்ஹாசன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகளும், அரசியல் பிரபலங்களும், திரையுலகினரும் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில்

நீட் தேர்வு; தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சிறப்பு சலுகை!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 சட்டப்பிரிவின் கீழ் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான சில சலுகைகளை அறிவித்து இருக்கிறார்.

பொருட்களின்மீது தங்கும் கொரோனா பல மணி நேரம் வாழும் தன்மையுடையதா???

பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பொருட்களின் மீது ஒரு நாளைக்கும் மேலாக கொரோனா வைரஸால் உயிர்வாழ முடியும்.

விடுமுறைக்காக கொரோனா வதந்தி பரப்பிய இருவர் கைது: சென்னையில் பரபரப்பு

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் கொரோனாவுக்காக விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக கொரோனாவால் 12 பேர் இறந்ததாக வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்