ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த விஜய்யின் 'மாஸ்டர்' நடிகர்.. எதிர்பார்ப்பு எகிறுதே..!
- IndiaGlitz, [Saturday,July 06 2024]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் சில செய்திகள் கசிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக நேற்றைய படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டதாகவும் அதேபோல் நடிகை ரெபா மோனிகா கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதி கேரக்டரில் நடித்தவர் மகேந்திரன். இவரை மாஸ்டர் மகேந்திரன் என்றே ரசிகர்கள் அனைவரும் நிலையில் தற்போது ‘கூலி’ படத்திலும் இவர் இணைந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த வீடியோவை மகேந்திரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருப்பினும் இதுவரை இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.