மும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மும்பை மாநிலத்தில் பைகுல்லா பகுதியை அடுத்த பிரதாப் சவுத் என்னும் இடத்தில் உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்தில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மதியம் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்து முதலில் ஒன்பதாவது மாடியில் இருந்து பரவியது. சிறிய அளவில் காணப்பட்ட இந்த தீ மளமளவென வளர்ந்து கட்டிடத்தின் மேல் மாடிகளுக்கு பரவியது.
தீ கட்டிடத்தின் பரவலுக்கு ஏற்ப பரவலாக இருந்ததால் பெரும் புகை மண்டலம் உருவானது. மேலும், வேலை நேரம் என்பதால் கட்டிடத்தில் பலர் இருந்தனர். எனவே அந்தப் பகுதி முழுவதும் இந்த தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
12 வீரர்கள் அடங்கிய தீயணைப்புப் படை, இத்தீயை அணைக்க கடுமையாக முயற்சித்து வருகிறது. தற்போது, கட்டிடத்தில் உள்ள அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் எனவும் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் அதிகாரப் பூர்வத் தகவல் வெளியாகி உள்ளன.
தீ பரவும் அளவு நிலையில் முதலில் 2 ஆம் நிலையாக அளவிடப் பட்ட இவ்விபத்து மதியத்திற்கு மேல் கட்டுக்குள் அடங்காமல் 4 ஆம் நிலை தீயாக மதிப்பிடப் பட்டுள்ளது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கீழ் அடுக்கில் தீ ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments