இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!
- IndiaGlitz, [Thursday,January 21 2021]
ஆக்ஸ்ட்போர்ட் பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி. இந்த மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மத்திய அரசு கோவிஷீல்ட் மற்றும் இந்திய தயாரிப்பான கோவேக்சின் போன்ற மருத்துகளை அவசர கால நோக்கில் இந்திய மக்களுக்கு கடந்த சில தினங்களாக வழங்கி வருகிறது.
இந்நிலையில் பூனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. சீரம் நிறுவனத்தின் முதல் முனையப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தை தற்போது தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி அணைத்து வருகின்றனர். அது குறித்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இந்தியா முழுவதும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடைமுறையில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சமும் எழுந்து உள்ளது. இந்நிலையில் இத்தீ விபத்து எதனால் ஏற்பட்டது? அதன் பாதிப்பு என்ன? என்பது போன்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
#WATCH Maharashtra: 10 fire tenders present at Serum Institute of India in Pune, where a fire broke out at Terminal 1 gate. More details awaited. https://t.co/wria89t22t pic.twitter.com/u960KTR7JS
— ANI (@ANI) January 21, 2021