லெபனான் தலைநகரில் பயங்கர வெடிவிபத்து: 100 அடி தூரத்திற்கு கட்டிடங்கள் சேதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
லெபனானின் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் நேற்று நிகழ்ந்த ஒரு பயங்கர வெடிப்பு விபத்து, அந்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வெடி விபத்து குறித்த சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது
நேற்று பிற்பகலில் நிகழ்ந்த இந்த வெடி விபத்து பெய்ரூட் நகரின் பல பகுதிகளில் எதி்ரொலித்ததாகவும், முதலில் நகரின் மையப்பகுதியில் கருமையாக புகை சூழ்ந்திருந்ததாகவும், பின்னர் அந்த புகை நகர் முழுவதும் பரவியதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
பெய்ரூட்டின் துறைமுகத்தில் நடந்த இந்த வெடி விபத்தால் துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் பயங்கர சேதம் அடைந்துள்ளது. வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. இதுகுறித்த பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடி விபத்தை அடுத்து நகரம் முழுவதும் புகை சூழ்ந்துள்ளதாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து யு.என் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் கூறியபோது, ‘இந்த விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது இதற்கு பின்னால் யாரேனும் உள்ளார்களா என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout