ராஜஸ்தானில் பயங்கர புழுதிப்புயல்: 

  • IndiaGlitz, [Tuesday,April 09 2019]

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் அவ்வப்போது புழுதிப்புயல் ஏற்பட்டு அந்த பகுதியில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் மீண்டும் ராஜஸ்தானில் பயங்கர புழுதிப்புயல் ஏற்பட்டது.

கடந்த ஞாயிறு அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 'சுரு' என்ற பகுதியில் மிகப்பெரிய புழுதிப்புயல் தாக்கியது. சுரு மட்டுமின்றி பிலானி, சிகார், ஜெய்ப்பூர் உள்பட ராஜஸ்தானின் பல பகுதிகள் இந்த புழுதிப்புயலால் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதித்துள்ளது. காணுமிடமெல்லாம் ஒரே புழுதிமயமாக இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் இந்த புழுதிப்புயலின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் படங்களில் உள்ள கிராபிக்ஸ் காட்சி போல் பல கிலோமீட்டர் நீளத்திற்கு தோன்றியுள்ள இந்த புழுதிப்புயலால் விவசாயிகளும், அந்த பகுதி பொதுமக்களும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.