சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் இணைந்த மாஸ் ஹீரோ: வீடியோ ரிலீஸ்

சிரஞ்சீவியின் அடுத்த திரைப்படத்தில் மாஸ் ஹீரோ ஒருவர் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 154வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தை கே.எஸ்.ரவீந்திரா இயக்க உள்ளார் என்பதும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் தெலுங்கு மாஸ் நடிகர் ரவி தேஜா இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளது