தொடர்ச்சியாக வெளியாகும் மாஸ் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள்.. வேற லெவலுக்கு செல்லும் தமிழ் சினிமா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவுக்கு தற்போது பொற்காலம் என்றே கூறலாம். கமல்ஹாசனின் ’விக்ரம்’ 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது என்றால் ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மாஸ் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பது மட்டுமின்றி அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் படம் வெளியாவதால் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து வருகின்றன
அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் வெளியாக இருக்கும் மாஸ் நடிகர்களின் படங்கள் மிகப்பெரிய சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என சினிமா டிராக்கர்கள் கணித்துள்ளனர்.
அதேபோல் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் 500 கோடிக்கும் மேல் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘தலைவர் 170’ திரைப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட மாஸ் பான் இந்திய நடிகர்கள் நடிக்க இருப்பது மட்டுமின்றி அனிருத் இசையும் இருப்பதால் இந்த படமும் ’ஜெயிலர்’ படத்தை விட அதிக வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ’தங்கலான்’ தனுஷ் நடித்து இயக்கி வரும் ’டி50’ ஆகிய படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இவற்றின் உச்சமாக சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’அயலான்’ திரைப்படம் உலக அளவில் கவனம் பெறும் என்றும் தெரிகிறது.
மேலும் சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ திரைப்படத்திற்கு இப்பவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இந்த படம் சூர்யாவின் படங்களிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தின் வசூல் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழ் சினிமா வேற லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது திரையுலகினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout