தனுஷ் உடன் இணையும் மாஸ் நடிகர்.. பிரமாண்ட படத்தின் இயக்குனர் இவரா?

  • IndiaGlitz, [Tuesday,March 07 2023]

கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரைப்படங்களில் இரண்டு மாஸ் நடிகர்கள் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாஸ் நடிகர்கள் நடிக்கும் படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன என்பதும் இவ்வாறான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கான் ஆகியோர்களும், ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி , பகத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் திரை உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான தனுஷ் உடன் பிரபல மாஸ் நடிகர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தில் ஆர்ஆர்ஆர் நாயகன் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகவும் இது ஒரு இரண்டு ஹீரோ கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும், சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை முடித்துவிட்டு அவர் இந்த படத்தை தான் இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஜெயம் ரவி, ஆர்யா பட நாயகியா இவர்?  கணவர் குழந்தைகளுடன் உள்ள அழகிய புகைப்படங்கள்...!

 ஜெயம் ரவி, ஆர்யா படங்களில் நாயகி ஆக நடித்த நடிகை கணவர் மற்றும் குழந்தைகளுடன் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி.. கவர்ச்சி நடிகையின் சகோதரி கைது..!

வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கவர்ச்சி நடிகையின் சகோதரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இன்று முதல் 'லால் சலாம்' படப்பிடிப்பு.. யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

'புஷ்பா 2' படத்தில் ராஷ்மிகாவை அடுத்து இணைந்த பிரபல நடிகை..!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் சமந்தாவின் ஐட்டம்

தனுஷ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ப்ரியங்கா சோப்ரா.. டிரைலர் ரிலீஸ்..!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த 'சிட்டாடெல்' என்ற வெப் தொடர் விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் இருக்கும் நிலையில் இதன் தமிழ் டிரைவர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.