close
Choose your channels

'லியோ' படத்தின் ரோலக்ஸ் இந்த மாஸ் நடிகரா? வேற லெவல் சம்பவம் செய்யும் லோகேஷ் கனகராஜ்..!

Tuesday, July 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே படத்தின் இறுதியில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் இருக்கும் என்பதும் ’விக்ரம் ’ படத்தில் ரோலக்ஸ் என்ற சூர்யாவின் கேரக்டரை அறிமுகப்படுத்தி அதிர வைத்தார் என்பதையும் பார்த்தோம். அந்த வகையில் ’லியோ’ படத்திலும் ரோலக்ஸ் போன்ற ஒரு கேரக்டரை கிளைமாக்ஸில் அறிமுகப்படுத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படத்தில் ஏற்கனவே சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உட்பட பல பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ராம்சரண் ரோலக்ஸ் போன்ற ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பிற்காக தான் தற்போது மீண்டும் காஷ்மீருக்கு படக்குழுவினர் சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் லோகேஷ், ’லியோ’ படத்தில் வேற லெவல் சம்பவம் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது இந்த தகவல் கசிந்து திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலில் இருந்து ’லியோ’ , லோகேஷின் LCU படம் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment