காற்று மாசால் கடவுளுக்கும் மாஸ்க் அணிவித்த பக்தர்கள்
- IndiaGlitz, [Thursday,November 07 2019]
கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்த காற்று மாசு மற்ற மாநிலங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது என்றும், இந்த காற்றின் மாசு வங்க கடல் வழியாக சென்னை உள்பட தென்மாநில நகரங்களை நோக்கியும் வர வாய்ப்பிருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் டெல்லியில் உள்ள காற்று மாசின் தாக்கம் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியில் அதிக அளவில் இருப்பதாகவும், இதனை அடுத்து அங்கு உள்ள பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்து, வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வதாகவும் தகவல்கள் வந்துள்ளன
இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற தர்கேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கும் பக்தர்கள் மாசு அறிவித்துள்ளனர்., காற்றின் மாசு காரணமாக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது போல் சிவபெருமானுக்கும் ஏற்படும் என்றும் அதனால் அவருக்கு மாஸ்க் அணிந்து இருக்கிறோம் என்றும் அவர் நலமாக இருந்தால்தான் மக்களாகிய நாமும் நலமாக இருப்போம் என்றும் அங்குள்ள பக்தர்கள் தெரிவித்துள்ளனர். சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிந்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது