மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு வருடமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்தது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருவதை அடுத்து விரைவில் கொரோனா வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
இதன்படி மேலும் இரண்டு மாதங்கள் சென்னையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். முக கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சென்னையை பொருத்தவரை தற்போது 1878 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சென்னை மாநகராட்சி இன்று தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments