தங்கம் வென்றார் மேரிகோம்: 18 தங்கப்பதக்கம் பெற்ற இந்தியா

  • IndiaGlitz, [Saturday,April 14 2018]

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வரும் நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான மேரிகோம் இன்று தங்கம் வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.

காமன்வெல்த் மகளிர் 48 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், வடக்கு அயர்லாந்து நாட்டின் வீராங்கனை கிறிஸ்டினாவை தோற்கடித்து தங்கம் வென்றார்.  தங்கம் வென்ற தங்கமங்கை மேரிகோம் அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி,  கிரிக்கெட் வீரர் சேவாக், முகம்மது கைஃப் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேரிகோம் வென்ற தங்கப்பதக்கத்தின் மூலம் இந்தியா 18வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது மேலும் 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை இந்தியா  வென்று 3வது இடத்தில் உள்ளது. 170 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 102 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

More News

இந்தியா ராக்கெட் விடுகிறது! தமிழகம் பலூன் விடுகிறது! தமிழிசை 

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா விண்வெளி துறையில் ராக்கெட்டுக்களை விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் இன்னும் பலூனை விட்டு கொண்டிருக்கின்றார்கள்

விருதுகளை மிஸ் செய்த தமிழ் திரைப்படங்கள்

2017ஆம் ஆண்டின் தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகளும் பாடகி சாஷா திரிபாதிக்கு ஒரு விருதும், சிறந்த தமிழ் படமாக 'டூலெட்' படத்திற்கு விருதும் என மொத்தம் 4 விருதுகள்

எழுந்து நின்று பாட மறுத்ததால் 8 மாத கர்ப்பிணி பாடகி சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் மேடையில் உட்கார்ந்து கொண்டு பாடியதால் ஆத்திரமடைந்த ஒருவர் பாடகியை சுட்டு கொலை செய்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு மேலும் ஒரு சிக்கல்! 

தமிழகத்தில் காவிரி பிரச்சனை கொளுந்துவிட்டு எரியும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என ஒருசில அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியதால்

மருமகன் தீக்குளிப்பிற்கு சீமான் கட்சியினரே காரணம்: வைகோ திடுக்கிடும் குற்றச்சாட்டு

இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நெருங்கிய உறவினர் சரவண சுரேஷ் விருதுநகரில் தீக்குளித்து 80% தீக்காயத்துடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்