உலக மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் பெற்று மேரிகோம் சாதனை

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

கடந்த சில நாட்களாக டெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம் நேற்று முன் தினம் நடந்த அரையிறுதி போட்டியில் வட கொரிய வீராங்கனை கீம் மியை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதனையடுத்து அவர் இன்று நடைபெற்ற சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் உக்ரைன் நாட்டின் வீராங்கனை ஹன்னா ஒகோடாவுடன் மோதினார். மிகவும் ஆக்ரோஷமாக நடந்த இந்த போட்டியில் ஹன்னா ஒகோடாவை வீழ்த்தி மேரிகோம் சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஏற்கனவே உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 5 முறை தங்கம் வென்றுள்ள மேரிகோம் தற்போது 6வது முறையாக தங்கம் வென்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது இந்த வெற்றியின் மூலம் மேரிகோம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆறு தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றூள்ளார்.

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மேரிகோம் அவர்களுக்கு நாடெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.