தமிழில் டப் செய்வதை நிறுத்திய 'மார்வெல் ஸ்டுடியோவின் அடுத்த படம்: காரணம் என்ன?

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

கிட்டத்தட்ட அனைத்து ஹாலிவுட் படங்களும் இந்திய மொழிகளில் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழ் மொழியில் வெளியாகாத ஹாலிவுட் படங்களே இல்லை என்று கூறலாம்.

இந்த நிலையில் மார்வெல் ஸ்டுடியோவின் அடுத்த திரைப்படமான ’Shang Chi’ என்ற திரைப்படம் தமிழில் வெளியாக வில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் செப்டம்பர் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில் இந்தியாவில் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதை அடுத்து தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்ற செய்தி தெரியாததால் இந்த படம் தமிழில் டப் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழ் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.