ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஏஞ்சலினா ஜோலியின் திரைப்படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி நடித்த ’எட்டர்னல்ஸ்’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெம்மா சென், ரிச்சர்ட் மேடன், ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’எட்டர்னல்ஸ்’ படம் 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது என்பதும் கடந்த நவம்பர் மாதம் இந்த படம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வெளியாகி 400 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூலை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’எட்டர்னல்ஸ்’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இந்த படம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ளவர்களின் ரசிகர்களுக்காக ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 12ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல இந்திய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The ones who will stay eternally in your hearts.
— Disney+ Hotstar (@DisneyPlusHS) December 29, 2021
Make way for the #Eternals!
Marvel Studios' @TheEternals streaming from Jan 12 in Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada and English. pic.twitter.com/LMPW8Cin9Z
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com