மார்வெல் ஸ்டுடியோவின் 'பிளாக் விடோ' இந்திய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தின் பல திரைப்படங்கள் உலக அளவில் பிரபலமாகி உள்ள நிலையில் தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த திரைப்படமான ‘பிளாக் விடோ’ என்ற திரைப்படத்தின் இந்திய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் இந்த படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆன நிலையில் இந்தியாவில் இன்னும் பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படாததால் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பிளாக் விடோ’ திரைப்படம் செப்டம்பர் 3-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மார்வெல் ஸ்டுடியோ மற்றும் ஸ்கார்லெட் ஜோஹன்ஸ்சன் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கார்லெட் ஜோஹன்ஸ்சன், ஃபுளோரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை கேட் ஷார்ட்லாண்ட் இயக்கியுள்ளார். இந்த படம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Go ?? back ?? to ?? where ?? it ?? all ?? began ??
— Disney+ Hotstar (@DisneyPlusHS) August 21, 2021
Marvel Studios’ #BlackWidow arrives 3rd September pic.twitter.com/LAks4W8gjh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com