விஷாலுக்கு வில்லனாகும் பிரபல விநியோகிஸ்தர்?

  • IndiaGlitz, [Friday,October 09 2015]

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் பிசியாக இருக்கும் விஷால், தேர்தல் முடிந்தவுடன் 'கொம்பன்' பட இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'மருது' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை படக்குழுவினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

முதலில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை இறுதி செய்வதில் இயக்குனர் முத்தையா தீவிரமாக உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஆர்.கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 'சூது கவ்வும்', 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற படங்களின் விநியோகிஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆர்.கே.சுரேஷ், பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் தற்போது 'மருது' படத்தில் வில்லனாக நடிகக்வுள்ளார். இந்த தகவலை ஆர்.கே.சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

'மருது' படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

More News

ராகவா லாரன்ஸ் மாணவர்களை கவர்ந்த 'புலி'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களின் அமோக ஆதரவால் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது....

சிம்புவுக்கு வடிவேலு கூறிய அறிவுரை

நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் சிம்பு, விஷாலை நரி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

சமாதானத்திற்கு தயாரா? விஷாலின் அதிரடி முடிவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை தவிர்க்க சரத்குமார் மற்றும் விஷால் ஆகிய இரு அணிகளையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள்...

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சங்களை கொடுத்திருந்தபோதிலும்...

நடிகர் சங்க தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த விஜயகாந்த்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் ...