ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,November 25 2017]

வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்த நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி  தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. இந்த தேர்தலில் போட்டியிட போவதாக ஏற்கனவே டிடிவி தினகரன் மற்றும் தீபா ஆகியோர் அறிவித்துள்ள நிலையில் திமுக வேட்பாளரை தேர்வு செய்ய இன்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடந்தது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

42 வயதான மருதுகணேஷ் திமுகவின் வட்டச்செயலாளராக இருந்தவர். தற்போது நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக உள்ள இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசு மீது மக்கள் கோபமாக இருப்பதால் தனது வெற்றி உறுதி என்று மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்கி, திமுக வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ஆதரவுதெரிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

More News

அதர்வா-ஆர்.கண்ணன் படத்தில் இணைந்த தனுஷ் நாயகி

'இவன் தந்திரன்' வெற்றி படத்தை அடுத்து இயக்குனர் ஆர்.கண்ணன், அதர்வா நாயகனாக நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சிகரெட் விளம்பரத்தில் வரும் சின்னப்பாப்பா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

திரைப்படங்களில் படம் திரையிடப்படுவதற்கு முன்னர் ஒரு விளம்பரத்தை நாம் அனைவரும் கண்டிப்பாக பார்த்திருப்போம். புகைப்பிடித்தல் உங்களுக்கு தீங்கு தரும்

எம்.எஸ் சுப்புலட்சுமி கொள்ளுப்பேத்தி பாடகியாக அறிமுகமாகும் தமிழ்ப்படம்

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளுப்பேத்தி ஐஸ்வர்யா 'குறள் 146' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிறார்.

அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்த விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர்

அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசிய விஜய் ஆண்டனிக்கு இயக்குனர் கருபழனியப்பன் தனது ஸ்டைலில் வாழ்த்து கூறி ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்

'வேலைக்காரன்' இசை வெளியீடு தேதியை அறிவித்த அனிருத்

வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு தேதியை இசையமைப்பாளர் அனிருத் அதிகாரபூர்வமாக வீடியோ செய்தி ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.