எதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்தின் சிங்கிள் பாடல் ஜீவன் நீயே: கண்களுக்கு விருந்து..!

  • IndiaGlitz, [Wednesday,September 04 2024]

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. ஜீவன் நீயே, எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்க செய்வதுடன், கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் அசத்துகிறது.

ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர் மற்றும் பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில், படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம் பிடித்து காட்டுகிறது.

புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப்பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில், இப்பாடல் மனதை மயக்குகிறது.

துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள 'மார்டின்' படம் கன்னட சினிமாவில் இருந்து வெளிவரும் மிகப்பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில், ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலான படைப்பாக, உருவாகியுள்ளது. இப்படம் உலகம் முழுக்க 13 மொழிகளில் டப் செய்யப்பட்டு, வெளியாக உள்ளது.

வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்‌ஷன் இணைந்து “மார்டின்” படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளர். AP அர்ஜுன் இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா ஹெட்ஜ் ஒளிப்பதிவு செய்ய, KGF புகழ் ரவி பஸ்ரூரின் பரபரப்பான பின்னணி இசையுடன், மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இப்படம் 11 அக்டோபர் 2024 அன்று கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

More News

கார்த்தியின் அடுத்த படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டரா? ஆச்சரிய தகவல்..!

கார்த்தி நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டர் இருப்பதாக கூறப்படுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது வேற லெவல் ட்விஸ்ட்.. 'கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்துள்ள நிலையில் தற்போது சிஎஸ்கே வீரரும் ஒரு சின்ன கேரக்டரில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்

'கூலி' படத்தின் ரஜினி போஸ்டரில் உள்ள 1421 எண்ணிற்கு இதுதான் அர்த்தமா? பரபரப்பு தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு

இதுமட்டும் உண்மையானால் தமிழக முதல்வரின் 'கோட்' நகர்வாக இருக்கும்: வெங்கட் பிரபு

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ள நிலையில் தனது சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இது மட்டும் உண்மையாக

விநாயகர் சதுர்த்தி 2024: தேதி, பூஜை நேரம், வழிபடும் முறை என்ன?

பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், வரும் விநாயகர் சதுர்த்தியை எப்படி சிறப்பாக கொண்டாடலாம் என்பது பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.