81 வயதில் பிகினி போஸ்… உலக அளவில் திரும்பி பார்க்க வைத்த மாடல் அழகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
வயதிற்கும் அழகுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 81 வயதில் நீச்சல் உடை அணிந்து பலரையும் அசர வைத்திருக்கிறார் பிரபல தொழிலதிபரும் மாடலுமான மார்த்தா ஸ்ட்வர்ட். இவரது புகைப்படம் தற்போது உலகம் முழுக்க கவனம் பெற்றிருக்கிறது.
பிரபல விளையாட்டு பத்திரிக்கையான ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட் தொடர்ந்து தங்களது அட்டைப்படத்தில் உலகப் பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் சுயமாக முன்னேறி பில்லியனராக இருந்துவரும் மார்த்தா ஸ்ட்வர்ட் என்பவரது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
இதற்கு முன்பு உலகப் பணக்காரரான எலான் மஸ்கின் தாய் மேய் மஸ்க் தனது 74 வயதில் பிகினி அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு அசத்தினார். இதையடுத்து மூத்த வயதில் பிகினி உடையணிந்து பலரையும் ஆச்சர்யப்படுத்திய பிரபலமாக தற்போது மார்த்தா காணப்படுகிறார். 81 வயதில் நீச்சல் உடை அணிவது குறித்து பேசிய அவர், நீங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் புதிய விஷயங்களை முயற்சி செய்ய உங்களை இந்த அட்டைப்படம் தூண்டும் என்று நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்த்தா தனது இளம்வயது முதலே பல பிராண்ட் நிறுவனங்களுக்கு மாடலாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களைத் துவங்கி நடத்திவந்த அவருக்கு சமையல் மீதும் அதிக ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து வாழ்வியல் குறித்த விஷயங்களிலும் கவனம் செலுத்திவந்த அவர் இதுவரை 99 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் Omnimedia எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்திவரும் அவர் எம்மி விருது விழாவில் தொகுப்பாளராகவும் இருந்துவருகிறார்.
இந்நிலையில் பெண்களின் அதிகாரத்தை முக்கியத்துவப் படுத்தும் வகையில் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட் இதழ் மார்த்தா ஸ்ட்வர்ட்டின் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. இதற்குப் பலரும் வரவேற்பு அளித்தாலும் பெண்களை கவுரப்படுத்துவதற்கு அவர்களது உடலைக் காட்சிப்படுத்த வேண்டுமா? என்று விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments