திருமணமான இரண்டே நாளில் மணப்பெண் எஸ்கேப்: மணமகன் போட்ட சூப்பர் பிளான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணமான இரண்டே நாளில் மணப்பெண் பணம் நகைகளை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன நிலையில் மணமகனின் மாஸ்டர் பிளான் காரணமாக போலி மணமகள் மற்றும் அவருடைய கூட்டணியினர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மதுரையை அடுத்த தனபால் என்பவர் 35 வயது ஆகியுள்ள நிலையில் திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளார். அப்போதுதான் சந்தியா பெண் தரகர் மூலம் கிடைக்க அந்த பெண்ணிடம் பேசி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு மணமகள் சார்பில் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் திருமணம் நடந்து இரண்டு நாள் முடிந்த நிலையில் திடீரென சந்தியா எஸ்கேப் ஆகி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தனபால் வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது பணம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் செய்திருந்தார்
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு நபரிடம் சந்திராவின் புகைப்படத்தை தரகர் கொடுத்ததை தனபால் கேள்விப்பட்டார். இதனை அடுத்து அந்த நபரிடம் பேசி அந்த கும்பலை வரவழைக்க சந்திரா மாஸ்டர் பிளான் போட்டார். தரகரிடம் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தொலைபேசியில் பேச வைத்து திருமண நாளையும் குறித்தார். திட்டமிட்டபடி அதிகாலை 6 மணிக்கு திருமணம் செய்ய சந்தியா, தரகர் உள்பட மூன்றுபேர் வந்த நிலையில் மறைந்திருந்த தனபால் மற்றும் அவருடைய உறவினர்கள் சந்தியாவையும் அவருடன் வந்தவர்களையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்
காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தபோது இதுவரை சந்தியா 6 திருமணங்கள் செய்துள்ளதாகவும் ஏழாவது திருமணம் செய்யும்போது சிக்கிக் கொண்டதாகவும் தெரியவந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போது மணமகன் உடன் சந்தியா இரண்டு நாள் மட்டும் தங்கி விட்டு அதன் பின்னர் பணம் நகைகளை கொள்ளையடித்து செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments