போதை விருந்தினர்களால் ரணகளமான திருமண நிகழ்ச்சி: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமண நிகழ்ச்சி என்றாலே மாப்பிள்ளை வீட்டார்களும், மணமகள் வீட்டார்களும் சந்தோஷமாக கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். சின்னச்சின்ன பிரச்சனை வந்தாலும் இருவீட்டார்களுக்கும் திருமணம் என்பது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். ஆனால் தெலுங்கானாவில் நடந்த ஒரு திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார்களுக்கும் பெண் வீட்டார்களுக்கும் நடைபெற்ற கலவரத்தால் கல்யாண மண்டபமே ரணகளமாகியுள்ளது
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் அருகே உள்ள சூர்யா பேட்டை என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது டிஜே என்று அழைக்கப்படும் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகள் மற்றும் மணமகன் வீட்டார்கள் விரும்பி கேட்கும் பாடல்களை இந்த இசைக்குழுவினர் பாடி வந்தனர். அப்போது இந்த இசைக்கச்சேரியின் போது மாப்பிள்ளை வீட்டார்கள் ஒரு குத்துப் பாடலை பாடச்சொல்லி அதற்கு நடனமும் ஆடினர். ஆனால் அந்த பாடல் சரியில்லை என்றும் வேறு பாடலை பாடுங்கள் என்றும் பெண் வீட்டார்கள் கூற, இதனால் மணமகன், மணப்பெண் ஆகிய இருவீட்டாருக்கும் ஆரம்பித்த சாதாரண வாக்குவாதம் பின்னர் பெரிய சண்டையாக மாறியது
இருதரப்பினர்களும் போதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி பின்னர் அடிதடி அளவுக்கு சென்றுவிட்டது. இந்த சண்டையில் பெண்களும் கலந்து கொண்டதால் திருமண மண்டபமே ரணகளமானது. திருமணத்திற்கு வந்திருந்த பலர் இந்த சண்டையை தங்களுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பு பெரியவர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை அமைதியாக நடந்ததால் திருமணத்திற்கு எந்தவித பாதிப்பும் இன்றி மறுநாள் நல்லபடியாக இந்த திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments