நடிகை லாவண்யா திரிபாதிக்கு நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை இந்த பிரபல நடிகர் தான்..!

  • IndiaGlitz, [Wednesday,May 17 2023]

பிரபல நடிகை லாவண்யா திரிபாதிக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் பிரபல தெலுங்கு நடிகர் தான் மாப்பிள்ளை என்றும் கூறப்படுகிறது

சசிகுமார் நடித்த ‘பிரம்மன்’, சிவி குமார் இயக்கத்தில் உருவான ’மாயவன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. தற்போது அவர் ‘தணல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் பல தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லாவண்யா திரிபாதி, தெலுங்கு நடிகர் வரும் வருண் தேஜ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இந்த காதல், திருமணத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ் தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாகவும் இந்த ஆண்டுக்குள் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நடிகை லாவண்யாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

More News

ரஜினியின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் வில்லனா? சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் சியான் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகையை வழங்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தகவல்

மே 26ஆம் தேதி ஓடிடியில் 'பொன்னியின் செல்வன் 2'? ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஒரு மாதம் கழித்து அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த கிரிக்கெட் பிரபலம்..! ஆச்சரியமான தகவல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் நடித்துவரும் நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான முத்து

'காசே தான் கடவுளடா' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.. புதிய தேதியை அறிவித்த படக்குழு..!

ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான 'காசேதான் கடவுளடா' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் மே 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் 'சீதாராமம்' நடிகை.. வேற லெவல் வளர்ச்சி..!

துல்கர் சல்மான் நடித்த 'சீதாராமம்' என்ற திரைப்படத்தில் ராணியாக நடித்த நடிகை மிருணாள் தாக்கூர் இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.