கடமை தான் முக்கியம்! கல்யாணத்தை தள்ளி வைத்த தம்பதிகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய தினம் இமாச்சலப் பிரதேசம் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நாடாளு மன்ற தேர்தல் 7 ஆவது கட்டமாக நடந்து முடிந்தது.
தேர்தல் தினமான நேற்று இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அணில்( 28 ) என்பவருக்கும் சரண்யா (24) என்கிற பெண்ணுக்கும் திருமண செய்து வைக்க பெரியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்று காலை 9 மணிக்கு இவர்களின் திருமண முகூர்த்தம் முடிவு செய்யப்பட்ட நிலையில், தம்பதிகள் இருவரும், திருமணம் நடைபெறுவதற்கு முன் நேரடியாக மனாலியில் அமைக்கப்பட்ட ஓட்டு சாவடிக்கு சென்று தங்களின் தலையால கடமையான வாக்குரிமையை நிறைவு செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணமகன் அணில், தானும் தன்னுடைய வருங்கால மனைவியும் முன்னரே இது குறித்து பேசி முடிவு செய்திருந்ததாகவும், அதன்படி தங்களுடைய திருமணம் சற்று தாமதமாக நடைபெற உள்ளதால் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஒவ்வொருவரின் வாக்கும் இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதாகும் என தெரிவித்தார். இதனால் இவர்களுடைய திருமணம் மூன்றுமணி நேரம் கழித்து நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments