கொரோனா சிகிச்சைக்காக திருமணத்தை தள்ளி வைத்த கேரளா பெண் மருத்துவர்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவர்கள் நர்ஸ்கள் தன்னலம் கருதாது நாளொன்றுக்கு 15 மணி நேரத்தில் இருந்து 20 மணி நேரம் வரை பணி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தனது திருமணத்தை தள்ளி வைத்துவிட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய முன்வந்திருப்பது மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் பரியரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் ஷிஃபா என்பவருக்கும் துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் கடந்த மார்ச் 29ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர் ஷிஃபா பணியில் அமர்த்தப்பட்டார்.

இருப்பினும் அவருக்கு திருமண தேதி நெருங்கியதை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு விடுமுறை அளிக்க முன்வந்தது. ஆனால் ஷிஃபா தனக்கு விடுமுறை வேண்டாம் என்றும், தனது திருமணத்தை தள்ளி வைத்துக் கொள்வதாகவும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக தொடர்ந்து பணியாற்றி விரும்புவதாகவும் கூறினார்.

ஷிஃபாவின் இந்த முடிவை மணமகன் வீட்டாரும் முழு மனதுடன் ஏற்று கொண்டதை அடுத்து தற்போது அவர் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதுகுறித்து ஷிஃபா கூறும்போது என்னுடைய திருமணம் இன்னொரு நாளுக்காக காத்திருக்கும். ஆனால் மக்களை தாக்க தொடங்கியிருக்கும் கொரோனா காத்திருக்குமா? எனவே தான் நான் பணியை தொடர்கிறேன். ஒரு மருத்துவராக எனது கடமையைத்தான் செய்கிறென். இதில் பெருமைப் பட எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஷிஃபாவின் சகோதரியும் மருத்துவர் என்பதும் அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா நேரத்தில் நினைவுகூருவோம்; இன்னும் சரிசெய்யப்படாத போபால் அணுவுலை வெடிப்பின் கோரங்கள்!!!

இந்த நூற்றாண்டில் இந்தியா சந்தித்த பெரும் பேரழிவு போபால் அணுவுலை வெடிப்பு. இதன் விளைவுகளையே இன்னும் இந்தியாவில் சரிச்செய்யப்படாத நிலையில் கொரோனா வந்து தாக்கிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: சுகாதார செயலாளர்

தமிழகத்தில் ஏற்கனவே 411 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்றி

விஜய்சேதுபதிக்காக எழுதிய திரைக்கதை இதுதான்: சேரன்

பாரதி கண்ணம்மா படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான சேரன்,

காய்கறி, மளிகை வாங்கவும் கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்

இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத நாடுகள்!!! உலக நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை !!!

உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது கொரோனா பற்றிய அச்சத்தில் உறைந்து இருக்கும்போது சில நாடுகள் மட்டும் நிம்மதி பெரூமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றன.