கொரோனா சிகிச்சைக்காக திருமணத்தை தள்ளி வைத்த கேரளா பெண் மருத்துவர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவர்கள் நர்ஸ்கள் தன்னலம் கருதாது நாளொன்றுக்கு 15 மணி நேரத்தில் இருந்து 20 மணி நேரம் வரை பணி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தனது திருமணத்தை தள்ளி வைத்துவிட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய முன்வந்திருப்பது மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் பரியரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் ஷிஃபா என்பவருக்கும் துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் கடந்த மார்ச் 29ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர் ஷிஃபா பணியில் அமர்த்தப்பட்டார்.
இருப்பினும் அவருக்கு திருமண தேதி நெருங்கியதை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு விடுமுறை அளிக்க முன்வந்தது. ஆனால் ஷிஃபா தனக்கு விடுமுறை வேண்டாம் என்றும், தனது திருமணத்தை தள்ளி வைத்துக் கொள்வதாகவும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக தொடர்ந்து பணியாற்றி விரும்புவதாகவும் கூறினார்.
ஷிஃபாவின் இந்த முடிவை மணமகன் வீட்டாரும் முழு மனதுடன் ஏற்று கொண்டதை அடுத்து தற்போது அவர் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதுகுறித்து ஷிஃபா கூறும்போது என்னுடைய திருமணம் இன்னொரு நாளுக்காக காத்திருக்கும். ஆனால் மக்களை தாக்க தொடங்கியிருக்கும் கொரோனா காத்திருக்குமா? எனவே தான் நான் பணியை தொடர்கிறேன். ஒரு மருத்துவராக எனது கடமையைத்தான் செய்கிறென். இதில் பெருமைப் பட எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஷிஃபாவின் சகோதரியும் மருத்துவர் என்பதும் அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments