மலை முகட்டில் திருமண நாளை கொண்டாடிய நட்சத்திர தம்பதி… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே இருவரும் தங்களது மூன்றாம் ஆண்டு திருமண விழாவை ஒரு மலை முகட்டில் இருந்தவாறு கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்துவரும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் “கோலியோன் கி ராஸ்லீலா – ராம் லீலா“, “பாஜீராவ் மஜ்தானி“, “பத்மாவத்“ போன்ற திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இதில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “ராம் லீலா“ படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இந்த ஜோடி தங்களது 3 ஆண்டு திருமண வாழ்வை நிறைவு செய்திருக்கின்றனர். இதைச் சிறப்பிக்க உத்தரகாண்டிற்கு சென்றுள்ள ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே தம்பதி அங்குள்ள மலை முகட்டில் இருந்தவாறு தங்களது அன்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் சூரிய ஒளிக்கு நடுவே மலையை சுற்றிப்பார்த்த இந்தத் தம்பதி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com