மலை முகட்டில் திருமண நாளை கொண்டாடிய நட்சத்திர தம்பதி… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,November 17 2021]

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே இருவரும் தங்களது மூன்றாம் ஆண்டு திருமண விழாவை ஒரு மலை முகட்டில் இருந்தவாறு கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்துவரும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் “கோலியோன் கி ராஸ்லீலா – ராம் லீலா“, “பாஜீராவ் மஜ்தானி“, “பத்மாவத்“ போன்ற திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இதில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “ராம் லீலா“ படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இந்த ஜோடி தங்களது 3 ஆண்டு திருமண வாழ்வை நிறைவு செய்திருக்கின்றனர். இதைச் சிறப்பிக்க உத்தரகாண்டிற்கு சென்றுள்ள ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே தம்பதி அங்குள்ள மலை முகட்டில் இருந்தவாறு தங்களது அன்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் சூரிய ஒளிக்கு நடுவே மலையை சுற்றிப்பார்த்த இந்தத் தம்பதி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

திருப்பூரில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்பூர் மாவடத்தில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து

அபிஷேக்கின் வைல்ட்-கார்ட் எண்ட்ரி எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 45 நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும்

கண்ணாடி டாஸ்க்கில் மனம் திறந்த ராஜூ: சிரித்து சிரித்து மழுப்பிய பிரியங்கா!

பிரியங்காவின் நரித்தனத்தை கண்ணாடி டாஸ்க் மூலம் ராஜு காமெடியாக கூறியதை சிரித்து சிரித்து மழுப்பிய பிரியங்காவின் காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளன.

'பாகுபலி 2' விநியோகிஸ்தருடன் கைகோர்க்கும் 'மாநாடு' தயாரிப்பாளர்!

'பாகுபலி 2' திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்த நிறுவனத்துடன் 'மாநாடு' தயாரிப்பாளர் கைகோர்த்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதியை தவிர 6 வில்லன்களா? ஆறு பேரும் யார் யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதியை தவிர 6 வில்லன்களை எதிர்கொள்வதாக கதை அமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது