close
Choose your channels

'மர்மதேசம்' தொடரின் குழந்தை நட்சத்திரம் திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் சின்னத்திரையுலகம்!

Wednesday, October 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் கடந்த 1996ஆம் ஆண்டு ஒளிபரப்பான ’மர்மதேசம்’ என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் திடீரென தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஐந்து வருடங்கள் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் ’மர்மதேசம்’ . மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் கதையம்சம் கொண்ட இந்த தொடர் அதன் பின்னர் ராஜ் டிவியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் என்பவர் மிகவும் அபாரமாக நடித்து இருந்தார் என்பதும் இவர் விஜயகாந்த் நடித்த ’கண்ணுபட போகுதய்யா’ உட்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கிய நிலையில் ஒரு திரைப்படத்தை இயக்க முயற்சித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென லோகேஷ் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் சின்னத்திரையை மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷின் தற்கொலை குறித்து அவரது நெருங்கிய நண்பர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தற்கொலை எதுக்கும் முடிவல்ல மச்சி ... இவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தும் இந்த முடிவு எடுத்திருக்க கூடாதுடா ... #மர்மதேசம் குழந்தையாக தொடங்கிய உன் பயணம் இப்படி முடிந்திருக்க கூடாது.. பெரிய இயக்குநரா ஜெயிச்சிருக்க வேண்டியவன் நீ

லோகேஷின் மறைவுக்கு சின்னத்திரை, பெரிய திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment