நட்ராஜை முதல்வர் ஆக்குங்கள். தமிழக மக்களுக்கு முன்னாள் நீதிபதி கோரிக்கை

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்றா ஓ.பன்னீர்செல்வ, சசிகலா ஆகிய இருவரும் தத்தமது பாணியில் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் இருவருமே மக்களுக்கு ஆற்ற வேண்டிய தற்போதைய உடனடி பணிகள் குறித்து கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஒருவர் எம்.எல்.ஏக்களை எப்படி கவர்வது என்ற நடவடிக்கையிலும் இன்னொருவர் கையில் உள்ள எம்.எல்.ஏக்களை எப்படி தற்காத்து கொள்வது என்பதிலும் பிசியாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த இருவர் குறித்து கவலைப்படாமல் இந்த பரபரப்பிலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியினை செய்து வரும் ஒரே எம்.எல்.ஏ மயிலாப்பூர் எம்.எல்.ஏவும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான ஆர்.நட்ராஜ் மட்டுமே. யாரை ஆதரிப்பது என்று அதிமுகவின் எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் 'நான் தற்போது மயிலாப்பூரில் மக்கள் சேவையில் இருக்கின்றேன் என்று கூறிய அவரது நேர்மையையும், மக்கள் மீதுள்ள அக்கறையையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்நிலையில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ, ' இந்த நேரத்தில் நட்ராஜ் போன்றவர்களை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ரீதியில் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்.நட்ராஜ் குறித்து அவர் மேலும் கூறியதாவது: 'தமிழக அரசியல்வாதிகள் மீது எப்போதுமே எனக்கு நல்ல எண்ணம் இருந்ததில்லை. ஆனால் நடராஜ் போன்றவர்கள் அவர்களில் விதிவிலக்கானவர்கள். நான், சென்னை பெசன்ட் நகர் பகுதியில், காலைவேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நடராஜை சந்திக்கும் வழக்கமுண்டு. அப்போது அவருடனான உரையாடல்களையும், நடவடிக்கைகளையும், அவரது செயல்பாடுகளையும் கண்டு மெச்சியிருக்கிறேன்.

நான் அண்மையில் சென்னை வந்திருந்தபோது மயிலாப்பூரில் இருக்கும் உயர் நீதிமன்ற விருந்தினர் மாளிகையில்தான் தங்கியிருந்தேன். அப்போது அங்கிருந்த மக்கள், நடராஜைப் பற்றியும் அவரது செயல்பாடுகளைப் பற்றியும் மிகவும் நல்ல முறையில் எடுத்துக் கூறினார்கள். நேர்மையான, உயரிய பண்புள்ள, செயல்பாடுகள் நிறைந்த ஓர் அறிவார்ந்த தலைமையை தமிழகம் தேர்ந்தெடுக்க வேண்டிய தக்க தருணம் இது' என்று கூறியுள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜூ அவர்களின் கருத்தை மக்கள் பரிசீலிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிங்கத்தின் கர்ஜனைக்கு பின் 'போகன்' வசூல் எப்படி?

சூர்யாவின் 'சி3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த 2ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் 'போகன்' வசூல் எந்தவிதத்திலும் பாதிப்பு இன்றி வெற்றிகரமாக தொடர் வசூலை செய்து கொண்டிருக்கின்றது...

தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞர் பாலுமகேந்திரா. நினைவு தின சிறப்பு கட்டுரை

'ஒரு படைப்பாளிக்கு அடிப்படை தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்து கொண்டிருக்கும். ஏ

முதல்வரின் கையை வெட்டுவதாக கூறிய கலைராஜன் மீது வழக்குப்பதிவு

தமிழக முதல்வர் ஒபிஎஸ் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய இருவரில் யார் ஆட்சியை கைப்பற்றுவார் என்ற பரபரப்பு இன்னும் முடியாத நிலையில் இருதரப்பினர்களின் ஆதரவாளர்களும் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்....

ஓபிஎஸ் கருத்துக்கு வெங்கையா நாயுடு வெளிப்படையான ஆதரவு. சசிகலா அதிர்ச்சி

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு பாஜக பின்னணியில் இருந்து ஆதரவு வழங்கி வருவதாக பல கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில் ஓபிஎஸ் கூறிய கருத்து ஒன்றுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளிப்படையான ஆதரவு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

பிப்ரவரி 18-ல் உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும். ராகவா லாரன்ஸ்

கடந்த மாதம் மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான எழுச்சி போராட்டம் உலகின் கவனத்தை திருப்பிய புரட்சி போராட்டம். இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் உள்பட அனைத்து தரப்பினர்களும் ஆதரவு கொடுத்தனர். கடைசி நாள் வன்முறையில் முடிந்தாலும், இந்த போராட்டம் சரித்திரத்தில் இடம்பெற்று விட்டது...