நட்ராஜை முதல்வர் ஆக்குங்கள். தமிழக மக்களுக்கு முன்னாள் நீதிபதி கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்றா ஓ.பன்னீர்செல்வ, சசிகலா ஆகிய இருவரும் தத்தமது பாணியில் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் இருவருமே மக்களுக்கு ஆற்ற வேண்டிய தற்போதைய உடனடி பணிகள் குறித்து கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஒருவர் எம்.எல்.ஏக்களை எப்படி கவர்வது என்ற நடவடிக்கையிலும் இன்னொருவர் கையில் உள்ள எம்.எல்.ஏக்களை எப்படி தற்காத்து கொள்வது என்பதிலும் பிசியாக உள்ளனர்.
இந்நிலையில் இந்த இருவர் குறித்து கவலைப்படாமல் இந்த பரபரப்பிலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியினை செய்து வரும் ஒரே எம்.எல்.ஏ மயிலாப்பூர் எம்.எல்.ஏவும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான ஆர்.நட்ராஜ் மட்டுமே. யாரை ஆதரிப்பது என்று அதிமுகவின் எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் 'நான் தற்போது மயிலாப்பூரில் மக்கள் சேவையில் இருக்கின்றேன் என்று கூறிய அவரது நேர்மையையும், மக்கள் மீதுள்ள அக்கறையையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்நிலையில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ, ' இந்த நேரத்தில் நட்ராஜ் போன்றவர்களை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ரீதியில் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.நட்ராஜ் குறித்து அவர் மேலும் கூறியதாவது: 'தமிழக அரசியல்வாதிகள் மீது எப்போதுமே எனக்கு நல்ல எண்ணம் இருந்ததில்லை. ஆனால் நடராஜ் போன்றவர்கள் அவர்களில் விதிவிலக்கானவர்கள். நான், சென்னை பெசன்ட் நகர் பகுதியில், காலைவேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நடராஜை சந்திக்கும் வழக்கமுண்டு. அப்போது அவருடனான உரையாடல்களையும், நடவடிக்கைகளையும், அவரது செயல்பாடுகளையும் கண்டு மெச்சியிருக்கிறேன்.
நான் அண்மையில் சென்னை வந்திருந்தபோது மயிலாப்பூரில் இருக்கும் உயர் நீதிமன்ற விருந்தினர் மாளிகையில்தான் தங்கியிருந்தேன். அப்போது அங்கிருந்த மக்கள், நடராஜைப் பற்றியும் அவரது செயல்பாடுகளைப் பற்றியும் மிகவும் நல்ல முறையில் எடுத்துக் கூறினார்கள். நேர்மையான, உயரிய பண்புள்ள, செயல்பாடுகள் நிறைந்த ஓர் அறிவார்ந்த தலைமையை தமிழகம் தேர்ந்தெடுக்க வேண்டிய தக்க தருணம் இது' என்று கூறியுள்ளார்.
மார்க்கண்டேய கட்ஜூ அவர்களின் கருத்தை மக்கள் பரிசீலிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments