இப்படி ஒரு படம் எடுத்தால் 'பாகுபலியை விட 10 மடங்கு வசூலாகும்: மார்க்கண்டேய கட்ஜூ
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் இந்தியாவின் அதிக வசூலை செய்த படம் என்ற பெருமையை நேற்றே பெற்றுவிட்டது. மேலும் ரூ.1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற சாதனையையும் இன்னும் ஓரிரு நாட்களில் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, 'பாகுபலி 2' படத்தை விட பத்து மடங்கு வசூல் ஆகும் படத்தை எடுப்பது எப்படி? என்பது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஐடியா கொடுத்துள்ளார்.
ஹாலிவுட்டில் மனிதக்குரங்குகள் குறித்த திரைப்படமான 'பிளானட் ஆப் தி ஏப்ஸ்' திரைப்படம் குறித்து அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த படத்தில் மனிதர்களை விட அதிகமாக சிந்திக்கும் மனித குரங்குகள் ஒருகட்டத்தில் மனிதர்களையே அடிமைப்படுத்திவிடும். இந்த படத்தை மனித குரங்குகளுக்கு பதில் பசுவை வைத்து ரீமேக் செய்தால் அந்த படம் 'பாகுபலி 2' படத்தை விட 10 மடங்கு வசூல் படைக்கும் என்று மார்க்கண்டேய கட்ஜூ, தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடந்து வரும் சண்டைகளும், கொலைகளும் ஒரு புறம் அதிகரித்து வருவதாகவும், அதே நேரத்தில் இன்னொரு புறம் பசுக்கள் கொல்லப்படுவதும், பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்து வருவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதாகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ள கட்ஜூ, ஒருசிலர் மாட்டிறைச்சியை இந்தியாவில் தடை செய்தே தீருவோம் என்று அடக்குமுறையை கையாண்டு வருவதாக கூறியுள்ளார்.
இவர்களது நோக்கம், பசுக்களையும், மாடுகளையும் பாதுகாப்பது தான். அப்படியென்றால், பாலிவுட் இயக்குனர்கள் 'பிளானட் ஆப் தி ஏப்ஸ்' போல 'பிளானட் ஆப் தி கவ்ஸ்' என்ற படத்தை எடுக்கலாம். அந்தப் படத்தில் பசுக்கள் மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் சுவாரஸ்யமான காட்சிகள் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் கொண்டு வந்தால் அந்த படம் 'பாகுபலி 2' படத்தை விட அதிக வசூல் படைக்கும் என்று கட்ஜூ தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments