பிரபுதேவாவின் அடுத்த படத்தை புரமோஷன் செய்யும் 'மார்க் ஆண்டனி' படக்குழுவினர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபுதேவா நடித்துள்ள அடுத்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் அந்த படத்தை விஷாலின் ’மார்க் ஆண்டனி’ படக்குழுவினர் புரோமோஷன் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பிரபுதேவா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பாகீரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் இந்த ட்ரெய்லரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் அடுத்த திரைப்படமான ’மார்க் ஆண்டனி’ படத்தின் குழுவினர் வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடிக்கும் விஷால், எஸ்ஜே சூர்யா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகிய மூவரும் ’பாகீரா’ படத்தின் டிரைலரை வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செம கில்லர் படம் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாகவும், அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என 7 நாயகிகளும் நடிக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், கணேசன் இசையில் உருவாகும் இந்த படம் வரும் மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
#MarkAntony Team ( @VishalKOfficial @iam_SJSuryah & @gvprakash ) will launch @PDdancing 's #Bagheera trailer launch by tomorrow @ 6 PM
— Vishal Film Factory (@VffVishal) February 24, 2023
In theatres from March 3rd 🐻
An @Adhikravi Pain KILLER pic.twitter.com/avDGYg8C86
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com