எஸ்ஜே சூர்யாவுக்காக கேக் வெட்டி கொண்டாடிய 'மார்க் ஆண்டனி' படக்குழுவினர்: ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று எஸ்ஜே சூர்யாவுக்காக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நூலிழையில் உயிர் பிழைத்த சம்பவம் நடந்தது.
இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நிலையில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர். எஸ்.ஜே.சூர்யா, விஷால் உட்பட படக்குழுவினர்களுக்கு கேக் ஊட்டிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த படத்தில் ஏற்கனவே விஷால், ரிதுவர்மா, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout