எஸ்ஜே சூர்யாவுக்காக கேக் வெட்டி கொண்டாடிய 'மார்க் ஆண்டனி' படக்குழுவினர்: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,April 17 2023]

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று எஸ்ஜே சூர்யாவுக்காக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நூலிழையில் உயிர் பிழைத்த சம்பவம் நடந்தது.

இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நிலையில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர். எஸ்.ஜே.சூர்யா, விஷால் உட்பட படக்குழுவினர்களுக்கு கேக் ஊட்டிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த படத்தில் ஏற்கனவே விஷால், ரிதுவர்மா, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்': நீண்ட இடைவெளிக்கு பின் மாஸ் அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்..!

சியான் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் இடையில் சில ஆண்டுகளாக கிடப்பில்

சித்தார்த் - அருண்குமார் படத்தின் டைட்டில்-பர்ஸ்ட் லுக் அறிவிப்பு..!

நடிகர் சித்தார்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை சித்தார்த் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தனுஷின் 50வது படம் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

தனுஷின் 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் அவரது நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய் வீட்டு சிசிடிவி கேமரா முன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பள்ளி மாணவி: நிறைவேற்றுவாரா விஜய்?

நடிகர் விஜய் வீட்டு முன் இருந்த சிசிடிவி கேமரா முன் பள்ளி மாணவி ஒருவர் நின்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மகளுக்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்.. ஏன் தெரியுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது மகளுக்கு வாழ்த்து கூறிய பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.