'மார்க் ஆண்டனி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர்.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்

  • IndiaGlitz, [Wednesday,October 05 2022]

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ’மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது என்பதும் இந்த படத்தில் விஷால் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்ஜே சூர்யாவின் கெட்டப் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ஜாக்கி பாண்டியன் என்ற கேரக்டரில் நடிப்பதாக விஷால் அறிவித்துள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான கெட்டப்பின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

இந்த படத்திற்காக கடந்த 1990களில் இருந்து அண்ணாசாலை போட்டோ செட் போடப்பட்டு அதில் பெரும்பாலான படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. விஷால் ஜோடியாக ரிது வர்மா இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இவர் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியால் விறுவிறுப்பாகும் 2ஆம் பாகம்: 'PS2' ரிலீஸ் எப்போது?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது

விஜய்யின் 'வாரிசு' படத்தில் குஷ்பு நடிக்கின்றாரா? அவரே அளித்த விளக்கம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது குஷ்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலத்தீவில் செம ரொமான்ஸ்.. சமீபத்தில் திருமணமான நட்சத்திர தம்பதிகளின் க்யூட் புகைப்படங்கள்!

சின்னத்திரை தொடர்களில் ஜோடியாக நடிக்கும் பல நட்சத்திரங்கள் நிஜத்திலும் ஜோடி ஆகி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆல்யா மானசா -சஞ்சய், சேத்தன் -தேவதர்ஷினி, ராஜ்கமல்

53வது மாடி.. 5384 சதுர அடி.. ரூ.48 கோடியில் அபார்ட்மெண்ட் வீடு வாங்கிய நடிகை!

53வது மாடியில் 5384 சதுர அடியில் ரூபாய் 48 கோடிக்கு பிரபல நடிகை ஒருவர் அபார்ட்மெண்ட் வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிள்': பிரபல இசையமைப்பாளரின் திருமண புகைப்படம் வைரல்!

 தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் திருமணம் இன்று நடைபெற்றதை அடுத்து எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிளுக்கு இன்று திருமணம் ஆகிவிட்டது என தமிழ் நடிகர் ஒருவர்