'மார்க் ஆண்டனி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர்.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ’மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது என்பதும் இந்த படத்தில் விஷால் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்ஜே சூர்யாவின் கெட்டப் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ஜாக்கி பாண்டியன் என்ற கேரக்டரில் நடிப்பதாக விஷால் அறிவித்துள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான கெட்டப்பின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.
இந்த படத்திற்காக கடந்த 1990களில் இருந்து அண்ணாசாலை போட்டோ செட் போடப்பட்டு அதில் பெரும்பாலான படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. விஷால் ஜோடியாக ரிது வர்மா இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இவர் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Presenting the Gangsta #SJSuryah's terrific look from #MarkAntony
— Vishal (@VishalKOfficial) October 5, 2022
Welcome #JACKIE_PANIDAN
A @gvprakash Musical @iam_SJSuryah @VishalKOfficial @vinod_offl @Adhikravi @riturv @ministudiosllp pic.twitter.com/dCX7wGt0GD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com