ரியோவில் கிடைத்த தங்கம் டோக்கியோவில் கிடைக்காதது ஏன்? மாரியப்பன் தங்கவேலு விளக்கம்!
- IndiaGlitz, [Sunday,September 05 2021] Sports News
பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும், அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் பாராட்டினர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கத்துடன் இந்தியா திரும்பிய மாரியப்பன் தங்கவேலுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேரில் அழைத்து பாராட்டினார். மாரியப்பனின் சாதனைகளை கண்டு நாடு பெருமை கொள்வதாக கூறி அனுராக் தாக்கூர் இந்தியா மேலும் பல பதக்கங்கள் வெல்லும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் தங்கவேலு, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தன்னால் டோக்கியோவில் ஏன் தங்கம் வெல்ல முடியவில்லை என்பதை விவரித்தார்.
ரியோவில் கிட்டத்தட்ட சென்னை கிளைமேட் இருந்தது ஆனால் ஜப்பானில் நாங்கள் போய் இறங்கும்வரை சென்னை கிளைமேட் இருந்தது ஆனால் போகப்போக கிளைமேட் மாறிவிட்டது எனவும் தெரிவித்தார். மேலும் டோக்கியோவில் மழை அதிகமாக பெய்தது என்றும், தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருந்ததால் வேகமாக ஓட முடியாமல் ஸ்லிப் ஆனது என்றும், அதேபோல் முழு உடம்பும் நனைந்துவிட்டதால் வேகமாக ஓட முடியவில்லை என்றும் அதனால்தான் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.