பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மிக உயரிய விருது அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,August 21 2020]

தமிழக விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் உள்ள சேலம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவருக்கு தற்போது இந்தியாவின் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகட், ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது