close
Choose your channels

2ஆம் பாகமாகிறது மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படம்..அவரே தெரிவித்த தகவல்..!

Tuesday, September 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "வாழை" திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் முழுவதும் இப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது. வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் "வாழை" படத்தின் 25வது நாள் கொண்டாட்ட விழாவில், மாரி செல்வராஜ் பேசுகையில், ’என்னைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள 'வாழை' படம் எடுத்தேன். இன்னும் குழப்பம் இருந்தால், 'வாழை' இரண்டாம் பாகம் மற்றும் தொடர்ந்து பல பாகங்களையும் எடுப்பேன். மேலும், "வாழை 2" படத்தில் சிவநந்தன் கேரக்டர் கண்டிப்பாக இருக்கும்.

இதையடுத்து சிவநந்தன் கேரக்டரில் பொன்வேல் நடித்திருந்த நிலையில் அவர் "வாழை 2" படத்தில் நடிப்பார் என்பதும் உறுதியாகியுள்ளது. மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் "வாழை 2" படத்தில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், அதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, "வாழை 2" படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment