2ஆம் பாகமாகிறது மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படம்..அவரே தெரிவித்த தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,September 17 2024]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் முழுவதும் இப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது. வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாழை படத்தின் 25வது நாள் கொண்டாட்ட விழாவில், மாரி செல்வராஜ் பேசுகையில், ’என்னைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள 'வாழை' படம் எடுத்தேன். இன்னும் குழப்பம் இருந்தால், 'வாழை' இரண்டாம் பாகம் மற்றும் தொடர்ந்து பல பாகங்களையும் எடுப்பேன். மேலும், வாழை 2 படத்தில் சிவநந்தன் கேரக்டர் கண்டிப்பாக இருக்கும்.

இதையடுத்து சிவநந்தன் கேரக்டரில் பொன்வேல் நடித்திருந்த நிலையில் அவர் வாழை 2 படத்தில் நடிப்பார் என்பதும் உறுதியாகியுள்ளது. மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் வாழை 2 படத்தில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், அதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, வாழை 2 படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

உதை கிடைக்கு பாத்துக்க என கமலிடமும், வெய்யில் தாங்கமுடியலபா சீக்கிரம் ஷூட் முடி என ரஜினியிடமும் சொன்ன சுமித்ரா....

நடிகை சுமித்ரா கேரள திருச்சூரில் பிறந்தவர். 1970 களில் நடிகையாக முன்னணி ஹீரோக்களுடன் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்.

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' இயக்குனர் இவர்தான்: இன்னொரு ரூ.100 கோடி வசூல் உறுதியா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம், ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியாகி சிறப்பான வரவேற்பை வசூலையும் பெற்றது.

ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார்.. அதிரடி நடவடிக்கை எடுத்த துணை முதல்வர் பவன் கல்யாண்..!

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஜனசேனா கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என  பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

'விடாமுயற்சி' படத்தின் கிளைமாக்ஸ் முடிந்தது.. ரிலீஸ் தேதி இதுதான்: ஆக்சன் கிங் அர்ஜூன்

அஜித் நடிப்பில் உருவாகும் "விடாமுயற்சி" படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தனுஷ் இயக்கும் 4வது படத்தின் டைட்டில் இதுவா? யார் யாரெல்லாம் நடிக்கின்றனர்?

தனுஷ் இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ள நிலையில் அவர் இயக்க இருக்கும் நான்காவது படத்தின் டைட்டில் மற்றும் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது.