இந்தியில் ரீமேக் ஆகும் மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படம்.. பாலிவுட் ரசிகர்கள் ஏற்பார்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வீடியோ ஒன்றும் வெளியான நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான முதல் படமான ’பரியேறும் பெருமாள்’ என்ற படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் கதிர், ஆனந்தி, யோகி பாபு, ஜி மாரிமுத்து உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் தர்மா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சித்தார்த் சதுர்வேதி, த்ரிப்தி இம்ரி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தின் டைட்டில் ’தடக் 2’ என்று வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படம் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ’சாய்ராத்’ என்ற மராத்தி படத்தின் ஹிந்தி ரீமேக் படமாக ’தடக்’ என்ற படம் உருவான நிலையில் தற்போது ’பரியேறும் பெருமாள்’ என்ற தமிழ் படத்தின் ரீமேக் படமாக ’தடக் 2’ உருவாகி வருகிறது.
’தடக்’ முதல் பாகம் ஆணவ கொலை சம்பவத்தையும் மையமாக கொண்ட கதையம்சம் என்ற நிலையில் இரண்டாம் பாகம் ஜாதிய கொடுமையால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள ஜாதி பிரச்சனை வட இந்தியாவில் இல்லை என கூறப்படுவதால் இந்த படத்தை பாலிவுட் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
PariyerumPerumal gets officially remade in Hindi !!
— AmuthaBharathi (@CinemaWithAB) May 27, 2024
And this promo clearly indicates that the Furniture is broken🤦♂️pic.twitter.com/RpsDnIyuoW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments