கமல்ஹாசன் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த ஒரே ஒரு படம் இயக்கிய மாரி செல்வராஜ்!

  • IndiaGlitz, [Wednesday,January 06 2021]

கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ படத்தில் உள்ள குறையை நிகழ்ச்சி ஒன்றில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’பாபநாசம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கல்லூரி விழா ஒன்றில் பேசியபோது ’பாபநாசம்’ படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததார்

இந்த படத்தில் கமல்ஹாசனின் மகளாக வரும் பெண் தன்னை வீடியோ எடுத்து மிரட்ட முயன்ற இளைஞரை எதிர்பாராமல் கொலை செய்து விடுவது குறித்து பேசிய மாரி செல்வராஜ், அப்போது அப்படத்தின் நாயகன் எங்குமே தன் மகளிடம் ’உன்னை படம் எடுத்தவன் தான் வெட்கப்படனும், இதில் உன்னுடைய குற்றம் எதுவுமே என்ற கூறவே இல்லை என்றும், உன்னுடைய அனுமதி இன்றி வீடியோ எடுத்தவன் தான் குற்றவாளி, நீ செய்தது தவறே இல்லை என்று அவர் கூறியிருந்தால் அந்த படம் தற்போதைய சமூக நிலையையும் எடுத்துக்காட்டி இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது மகளை காப்பாற்றுவதை மட்டுமே கமல்ஹாசன் யோசிப்பார் என்றும் ஏனெனில் நம்ம ஊரில் பெற்றோரின் அச்சம், பயம் தான் முதலீடு என்றும், தனது குடும்பத்தை காப்பாற்ற அவ்வளவு யோசித்த கமல்ஹாசன், இன்னொரு முறை வீடியோ எடுத்தால் போடா மயிறு’ என்று சொல்லிவிட்டு போ’ என்று சொன்னதே இல்லை என்றும் கூறினார். பொள்ளாச்சி சம்பவத்தில் முதலில் பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக ’நான் ஏன் பயப்பட வேண்டும்? குற்றம் செய்த நீ தான் பயப்படனும்’ என்று சொல்லியிருந்தால் அதன்பின் 250 பெண்கள் பாதிக்கப்பட்டிக்க மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.

மாரி செல்வராஜின் இந்த கருத்தை பலர் ஏற்றுக் கொண்டாலும் ஒரு சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு மாபெரும் கலைஞனின் படத்தை ஒரே ஒரு படத்தை எடுத்த மாரிசெல்வராஜ் குறை கூறுவதா என்ற ரீதியில் கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன

மேலும் ஒரு சிலர் அந்த படம் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் என்றும் மலையாளத்தில் உள்ளதை சிதறாமல் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த காட்சிகள் அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்

More News

லேட்டா வந்த கோவம்: மூஞ்சில சூடான எண்ணெயை ஊற்றிய மனைவி 

வீட்டிற்கு தாமதமாக வந்த கணவனை கேள்வி கேட்ட மனைவி தனது கேள்விக்கு சரியான பதில் வராததால் ஆத்திரமடைந்த மனைவி கணவனுடைய முகத்தில் சூடான எண்ணையை ஊற்றிய சம்பவம்

ஆரி, சனம் குறித்து முதல்முறையாக மனம்திறந்த அனிதாவின் கருத்துக்கள்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ஆரியுடன் சண்டை போட்டதால் தான் வெளியேற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.

ரம்யாவை முதலிடத்திற்கு கொண்டு வந்த ’மாஸ்டர்’ விஜய்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு சுற்றுகள் நடைபெற்றன. ஏற்கனவே நேற்று நடைபெற்ற

ஆன்மீகத்தில் ஐக்கியமாகிவிட்ட முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!!!

தமிழின் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை அமலாபால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2020 இல் நான் கற்றுக் கொண்டவை என்ற தலைப்பில் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

போதைப்பொருள் வழக்கில் தெலுங்கு பட நடிகை ஒருவர் கைது!!!

தெலுங்கு சினிமாவில் 2 ஆவது ஹீரோயினாகப் பல படங்களில் நடித்து வரும் ஸ்வேதா குமாரி என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளார்.