கமல்ஹாசன் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த ஒரே ஒரு படம் இயக்கிய மாரி செல்வராஜ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ படத்தில் உள்ள குறையை நிகழ்ச்சி ஒன்றில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’பாபநாசம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கல்லூரி விழா ஒன்றில் பேசியபோது ’பாபநாசம்’ படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததார்
இந்த படத்தில் கமல்ஹாசனின் மகளாக வரும் பெண் தன்னை வீடியோ எடுத்து மிரட்ட முயன்ற இளைஞரை எதிர்பாராமல் கொலை செய்து விடுவது குறித்து பேசிய மாரி செல்வராஜ், அப்போது அப்படத்தின் நாயகன் எங்குமே தன் மகளிடம் ’உன்னை படம் எடுத்தவன் தான் வெட்கப்படனும், இதில் உன்னுடைய குற்றம் எதுவுமே என்ற கூறவே இல்லை என்றும், உன்னுடைய அனுமதி இன்றி வீடியோ எடுத்தவன் தான் குற்றவாளி, நீ செய்தது தவறே இல்லை என்று அவர் கூறியிருந்தால் அந்த படம் தற்போதைய சமூக நிலையையும் எடுத்துக்காட்டி இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது மகளை காப்பாற்றுவதை மட்டுமே கமல்ஹாசன் யோசிப்பார் என்றும் ஏனெனில் நம்ம ஊரில் பெற்றோரின் அச்சம், பயம் தான் முதலீடு என்றும், தனது குடும்பத்தை காப்பாற்ற அவ்வளவு யோசித்த கமல்ஹாசன், இன்னொரு முறை வீடியோ எடுத்தால் போடா மயிறு’ என்று சொல்லிவிட்டு போ’ என்று சொன்னதே இல்லை என்றும் கூறினார். பொள்ளாச்சி சம்பவத்தில் முதலில் பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக ’நான் ஏன் பயப்பட வேண்டும்? குற்றம் செய்த நீ தான் பயப்படனும்’ என்று சொல்லியிருந்தால் அதன்பின் 250 பெண்கள் பாதிக்கப்பட்டிக்க மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.
மாரி செல்வராஜின் இந்த கருத்தை பலர் ஏற்றுக் கொண்டாலும் ஒரு சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு மாபெரும் கலைஞனின் படத்தை ஒரே ஒரு படத்தை எடுத்த மாரிசெல்வராஜ் குறை கூறுவதா என்ற ரீதியில் கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன
மேலும் ஒரு சிலர் அந்த படம் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் என்றும் மலையாளத்தில் உள்ளதை சிதறாமல் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த காட்சிகள் அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்
The reason why I stan this man @mari_selvaraj ❤️❤️❤️ pic.twitter.com/jFlFeseazG
— ArunAshok (@arun661) January 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments