இயக்குனர் மாரி செல்வராஜூக்கு ஏற்பட்ட இழப்பு: புகைப்படத்துடன் இரங்கல்!

  • IndiaGlitz, [Sunday,September 05 2021]

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான ’கர்ணன்’ திரைப்படத்தில் நடித்த குதிரை ஒன்று இறந்ததை அடுத்து அவர் அந்த குதிரையுடன் கூடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்

தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் ’கர்ணன்’. இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 63 கோடி ரூபாய் வசூல் ஆனதாகவும் தகவல்கள் வெளியானது

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் அடிக்கடி ஒரு குதிரையில் வருவார் என்பதும் அவர் குதிரையில் வரும் காட்சி அனைத்தும் மாஸ் ஆக இருக்கும் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அந்த குதிரை இறந்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குதிரையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து இதயம் நொறுங்கியது போன்ற ஒரு எமோஜியையும் பதிவு செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்ணன் படத்தின் படப்பிடிப்பின்போது அலெக்ஸ் குதிரையுடன் மாரிசெல்வராஜ் மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரும் நெருங்கி பழகிய நிலையில் தற்போது அந்த குதிரையின் மறைவு மாரிசெல்வராஜ்க்கு மிகப்பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது.