close
Choose your channels

இந்தியில் ரீமேக் ஆகும் மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படம்.. நாயகன், நாயகி யார் தெரியுமா?..

Tuesday, April 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ’பரியேறும் பெருமாள்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

கடந்த 2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா ரஞ்சித் தயாரிப்பில் கதிர், ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் உருவான திரைப்படம் ’பரியேறும் பெருமாள்’. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது வசூல் அளவில் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கதிர் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் சதுர்வேதியும், ‘கயல்’ ஆனந்தி வேடத்தில் நடிகை திருப்தி திம்ரியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே தமிழில் வெளியான பல திரைப்படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வட இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment