'லியோ' படம் பார்த்த மாரி செல்வராஜ்.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் கடந்த வியாழன் என்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தாலும் விமர்சகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது.
இருப்பினும் வசூலில் இந்த படம் தொடர்ந்து சாதனை செய்து வருகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இந்த படம் தொடர்ச்சியாக விடுமுறை நாள் என்பதால் அதிக வசூல் செய்து வருவதாக டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ’லியோ’ திரைப்படத்தை ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் பார்த்து படக்குழுவினர்களை வாழ்த்திய நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் ’லியோ’ படத்தை பார்த்து தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
’லியோ’ படத்தை பார்த்து தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் குறிப்பாக லியோ தாஸ் கதாபாத்திரம் உண்மையில் மிரட்டலாக இருப்பதாகவும் படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Glad to have watched @Dir_Lokesh bro and @actorvijay sir reunite on screens again!! Leo Das was Badass indeed!! Congratulations to the whole team!! 💐💐#Leo pic.twitter.com/0wCEeGokVL
— Mari Selvaraj (@mari_selvaraj) October 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments