மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் முதல் விமர்சனம்.. படம் பார்த்த பிரபலம் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் தெரிந்ததே. உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மாரி செல்வராஜ் ’வாழை’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படமும் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மாரி செல்வராஜுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு ’வாழை’ படத்தை சமீபத்தில் பார்த்தேன் என்றும் இந்த படத்தை பார்த்து அதிர்ந்து விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ’வாழை’ படத்தின் முதல் விமர்சனமாக சந்தோஷ் சிவனின் டுவிட் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் சிறுவர் சினிமாவாக உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Happy birthday chella kutty @mari_selvaraj ! Totally stunned by #Vaazhai. Brace yourselves for the movie of a lifetime 🥳🥳🥳. Keep inspiring us with your magic 🤗🤗 pic.twitter.com/5PdxaZNbgb
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 7, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments