மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன் என்ற படத்தை இயக்கிய அவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்கியுள்ள மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதுவரை மூன்று படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் நான்காவது படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாழை இலை போன்ற ஒரு அமைப்பில் உள்ள சாலையில் 4 சிறுவர்கள் ஓடும் போஸ்டரை மாரி செல்வராஜ் பதிவு செய்து ‘நாளை முதல் ஒரு புதிய பயணம்’ என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாரி செல்வராஜ் நாளை இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
நாளை இந்த படத்தின் பூஜை நடைபெற உள்ளதாகவும் இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் இந்த தகவல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tomorrow M4 ???? pic.twitter.com/Io5MeDcDT3
— Mari Selvaraj (@mari_selvaraj) November 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments